ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல் – கோவை போத்தனூர் இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் (எண் 06023), அக்டோபர் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்குப் போத்தனூரைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண் 06024), அக்டோபர் 17-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணிக்குப் போத்தனூரில் இருந்து புறப்பட்டு, அன்றிரவு 11.55 மணிக்குச் சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இதே வழித்தடத்தில் கூடுதல் சேவையாக, சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் (எண் 06033), அக்டோபர் 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.55 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை போத்தனூரைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண் 06034), அக்டோபர் 20-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணிக்குப் போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் புதன்கிழமை அதிகாலை 3.35 மணிக்குச் சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
