கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, தமிழ் உயராய்வுத்துறையில் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா மற்றும் பாரதி விழா நடைபெற்றது. கே.பி.ஆர் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி வாழ்த்துரை வழங்கினார். கதம்பம் இதழ் வெளியிடப்பட்டது.

7a 2 scaled

சிறப்பு விருந்தினராக பேச்சாளர் சுடர்விழி கலந்துகொண்டு, நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றக் கூடிய பொறுப்பும் ஆற்றலும் கொண்டவர்களாக இன்றைய கால இளைஞர்கள் விளங்குகிறார்கள். இளைஞர்களின் சிந்தனையில் தோன்றும் எழுச்சிமிகு எண்ணங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, சமூகத்தின் மேம்பாட்டிற்கும் துணைநிற்கும் என்றார்.

தொடர்ந்து கவிதை, நாடகம் மற்றும் பாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  சுழற்கோப்பையை தொழில்முறை கணக்கியல் துறை பெற்றது. நிகழ்வில் கல்லூரிச் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் கீதா, தமிழ்த்துறையின் தலைவர் அனுராதா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.