கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் என்.சி.சி மாணவர்கள் அகில இந்திய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

மொகாலியில் செப்., 12 முதல் 22 வரை நடந்த 35வது அகில இந்திய ஜி.வி. மௌலாங்கர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவர் ஜஸ்வந்த்,  சீனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

இதேபோல், இரண்டாமாண்டு மாணவர் நார்மன் பிரிட்டோ ரிச்சர்ட்,  சீனியர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இருவரும் 8 தேர்வு முகாம்களில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு கல்லூரி இணை என்.சி.சி., அலுவலர் லெப்டினன்ட் ஸ்ரீதர் பயிற்சி அளித்தார்.

மாணவர்களின் சாதனையை கேபிஆர் கல்விக்குழும தலைவர் கே.பி. ராமசாமி, செயலாளர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், முதல்வர் கீதா ஆகியோர் பாராட்டினர்.