தமிழ்நாடு கலை இலக்கியக் கழகம், கொட்டாரம், கவிஞன் பதிப்பகம், முகிலை இணைந்து மாநில அளவிலான கையெழுத்துப் போட்டி நடத்தியது. இதில் கொங்குநாடு கலை அறிவியல் க‌ல்லூரியிலிருந்து 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

7. a 4 scaled

இளங்கலை உயிரிவேதியியல் துறை மாணவி பெரியதாய், 4ம் இடம் பெற்று பரிசினையும் கலைச் சிற்பி விருதினையும் பெற்றார். சிறந்த கையெழுத்தில் எழுதிய 20 மாணவர்கள் கலைச் சிற்பி விருது பெற்றனர். மாணவர்களை சிறந்த முறையில் ஒருங்கிணைத்த தமிழ்த்துறைத் தலைவர் ராஜலட்சுமி திருவள்ளுவர் விருது பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கல்லூரி செயலர் சி.ஏ.வாசுகி, முதல்வர் சங்கீதா வாழ்த்து தெரிவித்தனர்.