கோவில்பாளையம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் 2026ம் ஆண்டு உலக இருதய தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலவச இசிஜி,, எக்கோ பரிசோதனைகளுடன் கூடிய மருத்தவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இதில் கோவில்பாளையம் நிர்வாக மருத்துவ இயக்குனர் டாக்டர் விமல்குமார், சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர் சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கி, இருதய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், மாரடைப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள், அதனை அதிநவீன கருவிகளைக் கொண்டு செய்திடும் சிகிச்சைகள் பற்றி கூறினர்.
தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நிர்வாக மேலாளர் சோமசுந்தரம், மருத்துவர்கள்,செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
