கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின், கே.பி.ஆர் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ., மாணவர் சங்க தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், எம்.பி.ஏ மாணவர்கள், மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு சங்க ஒருங்கிணைப்பாளர் திவ்யா லட்சுமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில், ஜி.ஆர்.ஜி. ஜென் நெக்ஸ்ட் புத்தாக்க மையத்தின் வணிக மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், தொழில்முனைவோராக விரும்புவோர் புதிய பொருட்கள் அல்லது சேவைகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, வாடிக்கையாளர்களின் உண்மையான தேவைகளைப் புரிந்து கொள்வது அவசியம்.
மேலும், வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளை அறிந்து கொள்வது, தொழில் வெற்றிக்கு வழிவகுக்கும். கிடைக்கக்கூடிய வளங்களை முறையாக மதிப்பிடுதல், மாதிரி தயாரிப்புகளைச் சோதித்தல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வணிகத் தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
