பாரத் கேஸ் நிறுவனத்தின் புதிய 10 கிலோ காம்போசிட் சிலிண்டர் விற்பனை தொடக்க விழா, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆஷா ஆறுமுகா பாரத் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக எமரால்டு ஜுவல் இன்டஸ்ட்ரி மற்றும் ஜூவல் ஒன் தலைவர் சீனிவாசன் கலந்து கொண்டார்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பிராந்திய மேலாளர் சாசங்க் சர்மா, விற்பனை அதிகாரி சுரேஷ் பாபு ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். கூடலூர் நகராட்சி சேர்மன் அறிவரசு, நாயக்கன்பாளையம் யுவா பப்ளிக் ஸ்கூல் தாளாளர் சத்யா அறிவரசு ஆகியோர் முதல் சிலிண்டர்களை பெற்றுக்கொண்டனர். விழாவில் ஆஷா ஆறுமுகா பாரத் கேஸ் மேலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய காம்போசிட் சிலிண்டர் எடை குறைவாகவும், அதிக பாதுகாப்பு அம்சங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், துருப்பிடிக்காத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் நீண்டகால பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டரில் எவ்வளவு கேஸ் உள்ளது என்பதையும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவையொட்டி முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,599 சிறப்பு விலையில் சிலிண்டர் வழங்கப்படுகிறது. வழக்கமான விலை ரூ.4,881. இந்த சிலிண்டரை முன்பதிவு செய்தும் அல்லது நேரடியாகவும் பெறலாம். முன்பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக்கு: 99525 80349.
இருவர் பயன்படுத்தும் குடும்பத்திற்கு ஒரு சிலிண்டர் சுமார் 40 நாட்கள் வரை வரும் எனவும், வழக்கமாக பயன்படுத்தும் வீட்டு கேஸ் அடுப்பிலேயே இந்த சிலிண்டரை பொருத்தி பயன்படுத்தலாம் எனவும் மேலாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
