ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட தினம் ஆவாரம்பாளையத்தில் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

ஆவாரம்பாளையத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகம் பரவியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரகதீஷ்வரன், கீர்த்திவாசன், சஹானா ஃபாத்திமா, பேராசிரியர்கள் சூர்யா, பாலுசாமி, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.