கோவை, சத்தி சாலையில் உள்ள ஆதி மாருதி சர்வீஸ் ஸ்டேஷனில், ஆதி மாருதி நிர்வாகம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், ஆதி மாருதி ஊழியர்களுக்கான இலவச பல் மருத்துவப் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை, ஆதி குரூப்ஸ் துணைத் தலைவர் பத்மநாபன் தொடங்கி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழுவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் தினகர் வழிகாட்டுதலின்படி டாக்டர் முகமது கலீபா தலைமை வகித்தார்.
முகாமில் ஊழியர்களுக்கு இலவச பல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பற்களை முறையாக பராமரிப்பது, வாய்வழி சுகாதாரத்தை பேணுவது உள்ளிட்டவை குறித்து பல் மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
