கோவை, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஜெனி அகல்யா, பள்ளி கல்வித்துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான குத்துச்சண்டை 50-52 கிலோ எடை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், மணிப்பூர் மாநிலத்தில், தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், மாணவியின் சாதனையை பாராட்டி, தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும், வெற்றி பெற்று, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுமென வாழ்த்தினார்.
