கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை விழாவான ‘இக்னிட்ரான் ’26’ நடைபெற்றது.

கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோராபிட் நிறுவனத்தின் உலகளாவிய மக்கள் செயல்பாடுகள் தலைவர் சங்கீத் ராமகிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 2,500 மாணவர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்பப் போட்டிகள், கண்காட்சிகள், மேலாண்மை சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் புதுமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்றன.

5a 6 scaled

24 மணி நேர ஹேக்கத்தானில் மாணவர் குழுக்கள், நிஜ வாழ்க்கைச் சிக்கல்களுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கினர். ஆட்டோ ஷோவில் பல்வேறு வாகனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையின் புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

பெங்களூருவில் உள்ள ஹேலியான் குளோபல் கேபபிலிட்டி சென்டரின் குளோபல் ரிவார்ட்ஸ் ஆபரேஷன்ஸ் இயக்குநர் நடராஜபெருமாள் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கினார்.