கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில், தேசிய நடன தினத்தை முன்னிட்டு, “இந்திய நடனங்கள் – இந்தியாவின் செழுமையான பண்பாட்டு பாரம்பரியத்தின் கொண்டாட்டம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைஞர் மற்றும் நடன வடிவமைப்பாளர், விக்னேஷ் ஜோகி கலந்து கொண்டு பேசுகையில்: இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் வரலாறு, மரபுகள், விழுமியங்கள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை இந்திய பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை விளக்கினார்.

10. kpr dance day scaled

பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், பாரம்பரிய அறிவை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்வதிலும் நடனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

நடனம் என்பது வெறும் பொழுதுபோக்கு வடிவம் மட்டுமல்லாமல், பண்பாட்டு வெளிப்பாடு, ஒழுக்கம், படைப்பாற்றல் மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான முக்கிய ஊடகம் என்பதையும் எடுத்துரைத்தார்.

நிகழ்வில் துறைத் தலைவர் பிரேமா, புல முதன்மையாளர் ஜோதி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.