திமுக மாநில தீர்மானக் குழு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் தலைமையில், தளபதி ரத்த தான இயக்கம் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கும் முகாம் வரதராஜபுரம் சாய் விவாகா மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்செல்வன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 19 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
