கோவை ஆதி ஹோண்டா (டூவீலர் டீலர்) மற்றும் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை கோவை சார்பில், ஆதி ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவைப் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்காக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சத்தி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மில்ஸ் சர்வீஸ் சென்டரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இம்முகாமில், ஆதி ஹோண்டா நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 200 ஊழியர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

4b 1 scaled

முகாமில் கண் பார்வை தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஊழியர்களுக்கு கண் ஆரோக்கியம், கண் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்த முகாமை ஆதி ஹோண்டாவின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்தது. முகாமை ஆதி ஹோண்டா சேவை பிரிவு மேலாளர் ராஜாபிரேமானந்த் மற்றும் டிரினிட்டி  கண் மருத்துவமனையைச் சேர்ந்த அசோக் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.