சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சி சுகுணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமிநாராயணசாமி, தலைவர் சுகுணா, செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குநர் சேகர், முதல்வர் ராஜ்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லூரி, நூலக மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவர் மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டிற்கும், விமர்சன சிந்தனை வளர்ச்சிக்கும் எழுத்தறிவு மற்றும் வாசிப்புப் பழக்கம் முக்கியமானவை. மாணவர்கள் நூலக வளங்களை சிறப்பாக பயன்படுத்தி தங்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
