கர்நாடக மாநிலம், மங்களூருவில் இருந்து போத்தனூர் வழியாக சென்னை எழும்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, மங்களூரு சென்ட்ரலில் இருந்து திங்கள்கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (06126), செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 26ம் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06125), செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 27ம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.