பொங்கல் பண்டிகை இலவச வேட்டி,சேலை திட்டத்தின் கீழ், நெசவாளர்களுக்கு எவ்விதத் தொய்வின்றி தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், வெளிச்சந்தையில் பாவு நூல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 1.77 கோடி வேஷ்டி, 1.77 சேலைகள் கோடி இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்தது.
இதற்கு நூல் டெண்டர் கோரப்பட்டு டெண்டர் பிரிக்கப்பட்டது. 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த இலவச வேஷ்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 1.77.64 கோடி சலவை செய்யப்பட்ட 2 மீட்டர் வேஷ்டி, 1.77.22 கோடி வெள்ளி மற்றும் தங்கம் நிற ஜரிகை பார்டர் கொண்ட 5.50 மீட்டர் சேலைகளும் தயாரிக்கப்பட உள்ளது.
வழக்கமான ஒப்பந்ததாரர்களிடம் இருந்து நூல் வரத் தாமதமானதால், இடைக்கால ஏற்பாடாக குறைந்த மதிப்பு கொள்முதல் முறையில் பாவு நூல் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், நாகர்கோவில்., சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, கடலூர், கோவை, திருப்பூர் ஆகிய 13 முக்கிய சரகங்களில் 10 நாட்களுக்கான 8 லட்சத்து 1891 சேலை உற்பத்தி தேவைக்கு 150.755 மெட்ரிக் டன் பாவு நூல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
கொள்முதல் செய்யப்படும் நூல் சிட்ரா உள்ளிட்ட அரசு மையங்களில் தர பரிசோதனைக்கு பிறகு அனுமதி வழங்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு கைத்தறி இயக்ககத்திற்கு அனுப்பப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை தெரிவித்துள்ளது.
