டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ./பி.டெக் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது.

கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி விழாவிற்குத் தலைமை தாங்கி பேசுகையில்: பொறியாளர்களால் உலகை மாற்றியமைக்க முடியும். ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் கல்வி, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுதுரைத்தார்.

19b scaled

கல்லூரியின் செயலாளர் டாக்டர் அருண் பழனிசாமி பேசுகையில்:
தானியங்கி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துப் பேசியதுடன், மாணவர்கள் தங்கள் தகவல் தொடர்புத் திறன்களைத் தினசரி அடிப்படையில் மேம்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

டாக்டர் என்.ஜி.பி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஸ்வரன், ஒரு வெற்றிகரமான பொறியாளராகத் திகழ்வதற்கு, அடிப்படை பொறியியல் அறிவு மற்றும் அடிப்படை அறிவியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் கல்விசார் இயக்குநர் முத்துசாமி, பொறியாளர்கள் ஒரு புதிய உலகை உருவாக்கும் திறன் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பிரபா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.