இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் சமீபத்தில் சந்தித்தார்.
அப்போது அவர், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கியதாகவும், குறிப்பாக வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வரும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பதால் இது பற்றி மத்திய அரசு ஆராயவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பின் போது அவர் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினின் ரைசிங் புதுச்சேரி புத்தகத்தையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
