கோவை மாநகரில் உருவாகும் குப்பைகள் பெருமளவு குவியும் இடமாக உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காலை 6 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பைகள் தேங்கியுள்ள இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. இதனால் சமூகம் நடைபெற்ற நேரத்தில் குப்பை கிடையிலிருந்து கடும் புகை சுற்று பகுதிகளுக்கு பரவி இருக்கிறது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

