கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் ஆகியோர், மாணவர்களிடையே ஒற்றுமை, கலாசார நல்லிணக்கம் மற்றும் இந்தியாவின் பன்முகப் பண்பாட்டை மதிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பாரம்பரிய ஓணம் உடைகளை அணிந்து வந்தனர்.
ஆடை அணிவகுப்பு, செண்டை மேளம், நகைச்சுவை நிகழ்ச்சி, பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வடம் இழுத்தல், உரியடி, சாக்கு ஓட்டம், எலுமிச்சை-கரண்டி ஓட்டம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சியில் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகள் அடங்கிய ‘ஓண சத்யா’ விருந்து பரிமாறப்பட்டது.
