இந்துஸ்தான் கல்வியியல் கல்லூரியின் 15வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ராஜவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இளங்கலை கல்வியியல் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அவர் பேசுகையில்: தொடர்ந்து கற்றல், தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் தங்களது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி பேசுகையில்: ஆசிரியர் பணி என்பது வெறும் தொழில் மட்டுமல்ல. அது ஒரு அறப்பணி மற்றும் சமூகப் பொறுப்பு. எதிர்கால ஆசிரியர்களாக உருவாகும் மாணவர்கள் தங்களை முழுமையாக கல்விப் பணிக்கு அர்ப்பணித்து, மாணவர்களின் அறிவு, திறமை மற்றும் நற்பண்புகளை வளர்க்க பாடுபட வேண்டும் என்றார்.

விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் பிரியா, கல்வியியல் கல்லூரியின் முதல்வர் குட்டியம்மாள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.