கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் பெறும் சிறப்பு முகாம் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் ஐந்து மண்டல அலுவலகங்களில் நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சாலையோர வியாபாரிகள் வங்கிகள் மூலம் ரூ.15,000 கடன் பெற ஆகஸ்ட் 24, 25, 27, 28, 29 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் ஐந்து மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், வங்கி கடன் பெற ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
