சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கோவை மாநகராட்சிக்கு (முதலிடம்) சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதாரக் கட்டமைப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில், மாநிலத்திலேயே சிறந்த மாநகராட்சிக்கான முதலிடத்துக்கான முதலமைச்சர் விருதை கோவை மாநகராட்சி வென்றுள்ளது.
கோவை மாநகராட்சியின் நிதி நிர்வாகம் மற்றும் சுய வருவாய், மூலதனச் சொத்துக்கள், திடக் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் மின்சார வாகனப் புரட்சி, நீர்நிலைகள் சீரமைப்பு மற்றும் வடிகால் வசதி, டிஜிட்டல் சேவை மற்றும் விரைவான ஆளுகை, சாலை உள்கட்டமைப்பு உள்ளிட்ட சிறப்பான பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
