இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் ஆகிய கல்லூரிகளின் முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி, நிர்வாக செயலாளர் பிரியா சதீஷ் பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள் ஜெயா, நடராஜன் மற்றும் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் இயக்குனர் சுரேஷ் பாஸ்கர் ஆகியோர் கல்லூரிகளின் கல்வித்தரம், வளாக நடைமுறை மற்றும் சாதனை குறித்து எடுத்துரைத்தனர்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய அளவில் யுபிஎஸ்சி தேர்வில் 18வது இடம் பிடித்த கல்லூரியின் முன்னாள் மாணவி ஸ்ருதி கலந்து கொண்டு பேசுகையில்: அனைத்து மாணவர்களுக்கும் கனவு ஒன்று இருக்க வேண்டும். அந்தக் கனவை சாத்தியமாக்குவதற்கான அனைத்து வகையான வாய்ப்புகளும் இந்த கல்லூரியில் கொட்டி கிடக்கின்றன. அதை பயன்படுத்தி ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கல்லூரிக்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி டீன்கள், துறை தலைவர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
