இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகத் துறை சார்பில் மார்க்கெட்டிங் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.

லியோ டேப்ஸ் மற்றும் ஃபிட்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மாலினி ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா, கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாணவர்கள் அமைத்திருந்த பல்வேறு வணிக அரங்குகளில் உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், விளையாட்டு மற்றும் புதுமையான வணிகக் கருத்துகள் காட்சிப்படுத்தப்பட்டன.