சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடத்தையும், சுகுணா பிப் பள்ளி இரண்டாம் இடத்தையும், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஹவுஸ் கிரிக்கெட் போட்டியில், க்ரீன் ஹவுஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

நிறைவு விழாவில் சுகுணா தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் லக்ஷ்மிநாராயணசாமி, தாளாளர் சுகுணா லக்ஷ்மிநாராயணசாமி, இயக்குநர் சாந்தினி அனீஸ் குமார், கல்லூரி முதல்வர் கோவிந்தராஜாலு, டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக டி.என்.பி.எல் வீரர் சேனாதிபதி கபிலீஸ்வரன் கலந்து கொண்டார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.