பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை -ஸ்ரீ காமேஸ்வரர் கோவிலில் திவ்ய திருக்கல்யாணம் நடைபெற்றது.
கோவில் அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீ ஜகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் மாங்கல்ய சிறப்பு பூஜைக்கு பின், வெள்ளிக்கிழமை காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருமண விழாவில் பெரிய தடாகம், சின்ன தடாகம், துடியலூர், சோமையம்பாளையம், டிவிஎஸ் நகர், ஆனைகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சார்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் மூலம் ஆன்மீகம், உலக ஒற்றுமை, குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் கயிறு, மஞ்சள், இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் வடை பாயாசத்தோடு கல்யாண விருந்தும் பரிமாறப்பட்டது.
