தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதத்திற்கான பயிற்சி வரும் 6 அன்று நடைபெறும்.

தேனீ இனங்கள் கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டியில் தேனீ வளர்ப்புக்கான முறை மற்றும் நிர்வாகம், தேனீக்களுக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயன்கள்,
தேனைப் பிரித்தெடுத்தல்,
தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகியவை குறித்து பயிற்சியில் கற்பிக்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், பயிற்சி நாளன்று காலை 9 மணிக்கு பயிற்சிக் கட்டணமான ரூ.590 நேரடியாகச் செலுத்தி தேனீ வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சி நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு: 0422-6611214