கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, முதுகலை ஆங்கிலத்துறை மற்றும் முதுகலை வன உயிரியல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், குன்னூர், மேலூர் பகுதிகளில் காணப்படும் நடுகல் கல்வெட்டுகளை நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில் கள ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர்.

கள ஆய்வின்போது, குன்னூர், மேலூர் பகுதிகளில் காணப்படும் நடுகல் கல்வெட்டுகளின் வரலாற்றுப் பின்னணி, சமூக வரலாற்றை அறிந்துகொள்வதற்கான தரவுகள், நடுகற்களை அறிவியல் முறையில் ஆவணப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து யாக்கை அறக்கட்டளை உறுப்பினர்கள், மாணவர்களுடன் தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்வில் மூன்று துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் என 50 பேர் கலந்துகொண்டனர். இக்கள ஆய்வுப் பயணத்தை யாக்கை அறக்கட்டளை ஒருங்கிணைத்தது.
