கோவை, அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான 47-வது கோவை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் பள்ளிகளுக்கு இடையேயான மாணவிகளுக்கான கோ-கோ போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது.

பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர், செயலாளர் அழகிரிசாமி, அஜ்ஜனூர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் மகேஸ்வரி ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் துறை தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து பேசுகையில்: கோ-கோ விளையாட்டின் தோற்றத்தை விளக்கியதுடன், இது நம்முடைய பாரம்பரிய பழமையான விளையாட்டுகளில் ஒன்று. அனைவரும்  விளையாட்டு உணர்வு மற்றும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்றார்.

14. a 1 scaled

முதல் நாள் போட்டியில் 50 சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1000 மாணவிகள் பங்கேற்றனர்.