கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிலிகான் லேப்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சிலிகான் லேப்ஸ் பொருள்களின் இணையத் தொழில்நுட்ப சிறப்பு மையம் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் பொங்கலூர் நா. பழனிசாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், சிலிகான் லேப்ஸ் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்திய ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் தலைவர் வெங்கடேஷ் நரசிம்மன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சிறப்பு மையம் மூலம் மாணவர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பப் பயிற்சி, சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள், கூட்டு ஆராய்ச்சி, புதுமைத் திட்டங்கள், தொழிற்பயிற்சி, பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.