நிர்மலா மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்காக நூலகப் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியின் நூலகர் ஆறுமுகம் பேசுகையில்: நல்ல வாசிப்புப் பழக்கம் வாழ்க்கையை மாற்றும். தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நூலகத்தில் செலவிட வேண்டும்.

இணையத்தில் கிடைக்கும் தகவல்களை விமர்சன சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும். அச்சு நூல்களும் மின்னணு வளங்களும் இணைந்து கற்றலை மேம்படுத்துகின்றன. போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ஆராய்ச்சி மனப்பான்மையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனப் பேசினார்.

நிகழ்வில் கல்லூரிச் செயலர் குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் மேரிபபியோலா, நூலகத் துறையின் தலைவர் துணை முதல்வர் ஜாக்குலின் மேரி, நூலகத்துறை உதவிப்பேராசிரியர் சத்யா கலந்து கொண்டனர்.