இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் மருத்துவமனை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
கல்லூரியின் ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் செட்டிபாளையம் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து, பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மலுமிச்சம்பட்டி சிக்னலில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியை செட்டிபாளையம் காவல்துறை ஆய்வாளர் செல்வராகவன், கல்லூரி முதல்வர் ஜெயா, தேசிய மாணவர் படை ஆசிரியர் ரவிக்குமார், அம்பாள் ஆட்டோ விற்பனை மேலாளர் கார்த்திக் துவக்கி வைத்தனர்.
நிகழ்வின்போது, சாலை பாதுகாப்பை பற்றிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு, ஒரு நொடியில் நிகழக்கூடிய விபத்தை 45 வினாடிகளில் குரு நாடகமாக நடத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் மாணவர்களில் ஒருவர் எமதர்மர் ராஜா போல் வேடம் அணிந்து தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை அன்பாக எச்சரித்தார்.
மேலும் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் முறையாக அணிந்திருந்த வாகன ஓட்டிகளுக்கு அம்பாள் ஆட்டோ சார்பாக பேனா, கீ செயின் மற்றும் சாக்லேட் பரிசாக கொடுக்கப்பட்டது.
