லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில், ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை இயக்குநர் சிந்தனைக் கவிஞர் கவிதாசனுக்கு, இலக்கியத் துறையில் வழங்கிய சிறப்பான வழிகாட்டுதல், மேன்டோர்ஷிப் மற்றும் ஊக்கத்திற்காக, ‘கைடன்ஸ் & மேன்டோர்ஷிப் ‘விருது வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.என்.ஆர். அரங்கில் நடைபெற்ற “ஞான அவதாரம் – 2026” என்ற உலகச் சாதனை இலக்கிய முயற்சியில், 28 புதிய எழுத்தாளர்களை வழிநடத்தி, 28 புதிய நூல்களை ஒரே மேடையில் வெளியிடச் செய்து, உலகச் சாதனை படைக்க முக்கிய பங்காற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
