கோவை ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ பள்ளியில் 2026-2027ம் கல்வியாண்டிற்கான ஆண்டு பரிசு வழங்கும் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சாந்தி ஆஷ்ரம் தலைவரும், சர்வதேச குழந்தைகள் மற்றும் பொது சுகாதார மையத்தின் நிறுவனருமான கெசெவினோ ஆரம் கலந்துகொண்டு, கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.

பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ், ஆண்டு அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

விழாவில் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பாளர் பிலிப் ஆர்.ஜே.ஃபவுலர், கௌரவப் பொருளாளர் ஜேம்ஸ் .ஜே. ஞானதாஸ், நிர்வாகக் குழு உறுப்பினர் சுசீதா ராமச்சந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி ஜான், ஆங்கிலோ- இந்தியன் பிரிவு முதல்வர் ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ முதல்வர் ஐலின் ஜெத்ரோ மற்றும் ஸ்டேன்ஸ் இன்டர்நேஷனல் முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.