சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி மாணவத் தலைவர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில்: சிறந்த தலைவனுக்குத் தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதை விட, நீங்கள் மற்றவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தலைவன் தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். தனது உணர்ச்சிகளைச் சமநிலையில் வைத்திருக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

13. a scaled

வெற்றி என்பது மேலே சென்று கொண்டே இருப்பது மட்டுமல்ல, நீங்கள் கீழே விழும்போது எவ்வளவு வேகமாக மீண்டு வருகிறீர்கள் என்பதில்தான் உள்ளது. நீங்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு உணர்த்தவும், அவர்களை ஊக்குவிக்கவும், வழிகாட்டவும் உங்களால் முடியுமென்றால், நீங்கள் ஒரு சிறந்த தலைவராக முடியும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.