ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் வருடாந்திர விளையாட்டு தினம் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் ஸ்ரீராம் வரவேற்பு வழங்கினார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தர்ராஜ் தலைமைவகித்து, தலைமைப்பண்பு, ஒழுக்கம், குழுமனப்பான்மை போன்ற பண்புகளை வளர்ப்பதில் விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த நடுவர் விருதாளரும், ஃபிஃபா அங்கீகாரம் பெற்ற நடுவருமான ஸ்ரீகிருஷ்ணா கலந்து கொண்டு பேசுகையில்: விளையாட்டை வாழ்நாள் முழுவதும் தொடரவும், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளவும், அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியின் மூலம் வெற்றியை அடையவும் மாணவர்களை ஊக்குவித்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மக்களை ஒன்றிணைத்தல், நற்பண்புகளை வளர்த்தல் மற்றும் தனிநபர்கள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்திச் சாதிக்க விளையாட்டு விளங்குகிறது என்பதை வலியுறுத்திக் கூறினார்.
தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆண்களுக்கான தனி நபர் சாம்பியன்ஷிப்பை ஆதித்யன், பெண்கள் பிரிவில் அனுப்பிரியா, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை “ரூபி ரேசர்ஸ்” அணி பெற்றது.
