கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (15.7.26) கோவை மாவட்டத்தில் உள்ள பல துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது

மின்தடை ஏற்படும் இடங்கள் :

விளாங்குறிச்சி &காளப்பட்டி துணை மின் நிலையங்கள் : காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், நேரு நகர், சிட்ரா, அசோக் நகர், வள்ளியம்பாளையம், பாலாஜி நகர், கே.ஆர்.பாளையம், ஜீவா நகர், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், குமுதம் நகர் மற்றும் செங்காளியப்பன் நகர்.

கீரணத்தம், சகாரா மற்றும் அலைன்ஸ்மால் துணை மின் நிலையம் : கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி ஒருபகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒருபகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு.

க.க.சாவடி துணை மின் நிலையம் : முருகன்பதி, சாவடிபுதுார், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனுார், வீரப்பனுார், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம் மற்றும் ரங்கசமுத்திரம்.