கோவை கணபதி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் அம்பாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் நந்தகுமார் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

அப்போது, மார்ச் 2026ல் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த இப்பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு “செல்வம் ஏஜென்சீஸ் என். துரைசாமி நினைவு கல்வி உதவித்தொகை” வழங்கப்பட்டது.

மொத்தம் 8 மாணவிகள் இந்த உதவித்தொகையை அமைச்சர் முன்னிலையில் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட கல்வி அதிகாரி கோமதி, பள்ளி முதல்வர் சிவக்குமார்,  பள்ளி வளர்ச்சி குழு தலைவர் கமலா மற்றும் குழுவின் பிற நிர்வாகிகள் பங்கேற்றனர்.