ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 34வது கல்லூரி தினவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பெண்கள் கல்வியோடு தைரியம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என உரையாற்றினார். மேலும், நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது மற்றும் பெற்றோர் அமைத்துத் தரும் வாழ்க்கை நிலையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் அவசியத்தையும் மாணவிகளிடம் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.

முன்னதாக, கல்லூரியின் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் சித்ரா வாசித்து, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவிகள் பெற்ற விருதுகளைப் பற்றிய தகவல்களை வழங்கினார். பெஸ்ட் அவுட்கோயிங் விருது மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை பெற்ற மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், ஆய்வு நிறுவனங்களிடமிருந்து ஆய்வுத்திட்ட நிதி பெற்ற பேராசிரியர்களும், சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்த ஆராய்ச்சியாளர்களும் விழாவில் பாராட்டப்பட்டனர்.