கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூட்ஸ் நிறுவனங்கள் சார்பில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து, உடல்திறன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பிற விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய கவிதாசன், கல்வியுடன் விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். விளையாட்டு உடல் ஆரோக்கியம், ஒழுக்கம், தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு மற்றும் குழு ஒற்றுமையை வளர்க்கும் சிறந்த கருவி என்று வலியுறுத்தினர்.
இந்த விளையாட்டு உபகரணங்கள் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சாதிக்கவும் உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
