கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி முழு நேரம், பகுதி நேர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளிலும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பிஎச்.டி ஆராய்ச்சி படிப்புகள் (பகுதிநேரம் மற்றும் முழுநேரம்) வழங்கப்படுகின்றன.
இந்த படிப்புகளில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையவழி (www.b-u.ac.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,000, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎச்.டி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இந்த மாதம் நடக்கிறது. தேரவு அட்டவணை, பிற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.
