கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரி சார்பில், “பிசியோதெரபி கல்வியில் திறன் மதிப்பீடு”  குறித்த இரு நாள் ஆசிரியர்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கல்லூரியின் முதல்வர் கார்த்திக் பாபு தொடங்கி வைத்தார்.

ஓமன் நாட்டின் நிஸ்வா பல்கலைக்கழகத்தின் மறுவாழ்வு மற்றும் மருத்துவ அறிவியல் துறைத் தலைவர்  நரசிம்மன் சுவாமிநாதன் சிறப்பு பயிற்சியினை வழங்கினார். தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பிசியோதெரபி கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.