போக்குவரத்து நெரிசல் கோவை மாநகரின் சாலைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படிப்பட்ட சாலைகளை பொதுமக்கள் பாதுகாப்பாக கடக்க, மக்களாகவே இயக்கி, சாலையை கடக்க உதவும் கட்டமைப்பாக பெலிகன் சிக்னல் இன்று கோவை நவ இந்தியா பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் சேவையை கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஐ.பி.எஸ்., இன்று துவக்கி வைத்தார். கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனை ஆதரவுடன் அமைக்கப்பட்ட இந்த சிக்னல், நவ இந்தியா பேருந்து நிலையம் மற்றும் அதன் எதிரே அமைந்துள்ளடெகத்தலான் கிளை இருபுறமும் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை இருபுறமிருந்தும் கடப்பவர்கள் இதனை இயக்கிடமுடியும்.

வருத்தத்தில் பீளமேடு – விளாங்குறிச்சி செல்லும் பாதசாரிகள் …

இதுபோன்ற பெலிகன் சிக்னல் அமைப்பு ஒன்று அவிநாசி சாலையில் பீளமேடு – விளாங்குறிச்சி செல்லும் பிரதான பகுதியில் நிறுவப்பட்டது. ஆனால் அதை இயக்கக்கூடிய பட்டன் உடைந்துபோனதால் இன்று வரை பாதசாரிகள் அங்கு பெலிகன் சிக்னல் இருந்தும் அதை பயன்படுத்தமுடியாமல் சாலையை ஆபத்தான நிலையில் கடக்கின்றனர். OLDPELICAN scaled
PELICANFAILS scaled
தனியார் பங்களிப்புடன் சாலையை கடக்க பாதுகாப்பான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டாலும், அவை பழுதாக காரணம் என்ன என்பதை அதிகாரிகள் ஆராய வேண்டும். இதுபோன்ற கட்டமைப்புகள் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா கொண்டு இதை செய்யவேண்டும்.