தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான பயிற்சி வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.

பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் பயிற்சி நாளன்று ரூ.850 நேரிடையாக செலுத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள் ரூ. 590 செலுத்த வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.