கோவை, அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கோவையின் எல்.எம்.டபிள்யூ நிறுவனத் துணைப் பொது மேலாளர் பிரவீன் குமார் கலந்துகொண்டு பேசுகையில், பள்ளியிலேயே யோகா கற்கக் கிடைப்பது மாணவர்களின் பாக்கியம். தனது சிறுவயதில் யோகா பற்றிய விழிப்புணர்வு தமக்கு இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் சூர்ய நமஸ்காரம், தாடாசனா, வ்ரிக்ஸாசனா, உஷ்ட்ராசனா, பாலாசனா, புஜங்காசனா, சேதுபந்தாசனா மற்றும் சவாசனா போன்ற பல்வேறு யோகாசனங்களைச் செய்து காட்டினர்.
மலரும் தாமரை, சமநிலையின் இறக்கை மற்றும் மனிதப் பிரமிடு போன்ற சிறப்பு வடிவங்களையும் நேர்த்தியாக உருவாக்கி அசத்தினர்.

நிகழ்ச்சியில் பள்ளியின் இணைச் செயலாளர் சூர்ய நாராயணன், பள்ளி முதல்வர் வித்யாசங்கர்,
துணை முதல்வர் லட்சுமி பிரபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.