சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில்: அறிவியலும் தொழில்நுட்பமும் மரத்தின் கிளைகளைப் போல ஆண்டுக்காண்டு மாறலாம், ஆனால் நமது கலாச்சாரம் என்பது ஆழமான வேர்களைப் போன்றது. அந்த வேர்களை நாம் யோகாவின் மூலம் பலப்படுத்த வேண்டும். மாணவர்கள் உடலால் வலிமையாகவும், புத்தியால் கூர்மையாகவும், ஆன்மீக ரீதியாக ஒளிபெற்றவர்களாகவும் திகழ யோகா துணைபுரியும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மற்றும் ஜெர்மனி எர்ஃபர்டிலுள்ள கொனிஜென் லூயி ஜிம்னாஷியம் பள்ளிகளுக்கிடையிலான கலாச்சாரப் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, அப்பள்ளியின் 22 மாணவ மாணவியர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைதந்தனர்.
ஜெர்மனி பள்ளி மாணவ மாணவியரும் யோகா பயிற்சியில் கலந்துகொண்டனர்.
800 மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் யோகா பயிற்சியில் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
