பண்ருட்டியில் இருந்து கோவை மார்க்கெட்டிற்கு பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

WhatsApp Image 2026 06 20 at 5.32.32 PM 1

கோவை பழ மார்க்கெட்டிற்கு கேரளா, கர்நாடகா, பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலாப்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்திற்கு தினமும் 5 லாரிகளில் பலாப்பழம் வரத்து இருக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக வரத்து அதிகரித்துள்ளது.

WhatsApp Image 2026 06 20 at 5.32.32 PM 2

குறிப்பாக, கேரளாவில் இருந்து வரும் பலாப்பழங்கள் ஒரு கிலோ ரூ.20 விலையிலும், பண்ரூட்டி பலாப்பழம் கிலோ ரூ.30க்கும் விற்பனையாகிறது. அந்த வகையில் 4 முதல் 15 கிலோ வரை இருக்கும் ஒரு பழம், ரூ.100 முதல் ரூ.450 வரை விற்பனையாகிறது. பலாப்பழங்கள் வாங்கி சாப்பிட பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.