பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

2026ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக உயர்கல்வி ஆலோசகர் ஜெயப்ரகாஷ் காந்தி கலந்துகொண்டு, எதிர்காலத்தை வடிவமைக்கும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். மேலும் மாணவர்கள் துறைக்கு முக்கியத்துவம் தருவதை விட கல்லூரிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என வலியுறுத்தினார்

6b 3 scaled

2500க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு உயர் கல்வி ஆலோசனை பெற்றனர். துணை முதல்வர் செந்தில்குமார் சிறப்பு உரை வழங்கினார்.